தல ரசிகர்களே… ‘வலிமை’முதல் பாடல் வெளியானது…!!

தல ரசிகர்களே… ‘வலிமை’முதல் பாடல் வெளியானது…!!

தல ரசிகர்களே… ‘வலிமை’முதல் பாடல் வெளியானது…!!
X

போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் இரண்டாவது முறையாக நடித்து வரும் படம் ‘வலிமை’. முன்னதாக இந்த கூட்டணியில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கிய ஹெச். வினோத் தான் இந்த படத்தையும் இயக்கி வருகிறார்.

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு வலிமை படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் முதல் பார்வை மோஷன் போஸ்டர் வெளியிட்டப்பட்டது.

இந்நிலையில் சற்றும் எதிர்பாராதவிதமாக மற்றொரு அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று இரவு வலிமை படத்தின் முதல் பாடல் வெளி வருவதாக அறிவிக்கப்பட்டது . யுவன் சங்கர் ராஜா இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். இந்த செய்தி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சற்று முன் வலிமை படத்தின் முதல் பாடல் வெளியானது...


Tags:
Next Story
Share it