புதுசா இருக்கே! சென்டர் மீடியனில் ‘ஹாயாக’ சென்ற அரசுப் பேருந்து!!
புதுசா இருக்கே! சென்டர் மீடியனில் ‘ஹாயாக’ சென்ற அரசுப் பேருந்து!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ளூர் அரசுப் பேருந்து ஒன்று சென்டர் மீடியனில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இரண்டு தினங்களுக்கு முன்பு காலை அரசுப் பேருந்து ஒன்று பொள்ளாச்சி - ஜமீன் ஊத்துக்குளி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் இருந்து தடம் மாறி அந்தப் பேருந்து சென்டர் மீடியனில் ஏறியது.

ஆனால் ஓட்டுநர் அதைப் பொருட்படுத்தாமல் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்படியே நடுவில் இருக்கும் பூச்செடிகளை உடைத்துக்கொண்டு பேருந்தை இயக்கினார். அதனை அருகில் இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர் ஒருவர் படம் பிடித்துள்ளார்.
அந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பஸ்சை இயக்கிய டிரைவரின் கவனக்குறைவால் ஏற்பட்டு இருக்கலாம். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in

