விட்டாச்சு லீவு! நடிகையுடன் ஜாலியாக ஊர் சுற்றும் கிரிக்கெட் வீரர்!
விட்டாச்சு லீவு! நடிகையுடன் ஜாலியாக ஊர் சுற்றும் கிரிக்கெட் வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, மோடி மைதானத்தில் இங்கிலாந்துக்கு சிம்ப சொப்பனமாக இருந்ததை அத்தனை சீக்கிரத்தில் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அந்த வெற்றியின் சுவடு காய்வதற்குள் ஸ்கூல் பையன் மாதிரி, நான்காவது போட்டியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு லீவு கேட்டு நின்ற பும்ராவை கொஞ்சம் அதிர்ச்சியோடு தான் பார்த்தது தேர்வு குழு. இருந்தாலும் சரியென பும்ராவை நான்காவது போட்டியிலிருந்து விடுவித்தது.
லீவு கிடைச்ச உற்சாகத்தில், தன்னுடைய காதலியும், பிரபல நடிகையுமான அனுபா பரமேஸ்வரனுடன் விடுமுறையில் இருப்பதாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளது ஜோடி.
கிரிக்கெட் வீரர் பும்ரா தற்போது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். அவருடைய வீட்டார் பெண் பார்த்து, அதற்கான அனைத்து செயல்பாடுகளையும் முடித்து விட்டனர் என்கிற தகவல்கள் கசிந்து வருகிறது. திருமணம் நடைபெறுவது மட்டுமே பாக்கி என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இவரை திருமணம் செய்து கொள்ளப் போகும் அந்த பெண் யார் என்கிற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பும்ராவின் காதலி என்று கிசுகிசுக்கப்பட்ட நடிகை அனுபா பரமேவரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘இனி விடுமுறை தினம் எனக்கு’ என்று பதிவிட்டுள்ளார். இதனால் பும்ரா இவரை தான் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக பும்ரா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இருவரும் சமூகவலைதளம் மூலம் நட்பாகினர். இன்ஸ்டாவில் அனுபமா ஏதேனும் பதிவிட்டால், அதற்கு பும்ரா லைக் போடுவதும் கமெண்ட் செய்வதும் வாடிக்கையாக இருந்தது. அதேபோல பும்ரா ஏதேனும் பதிவிட்டால், அனுபமாவும் அதற்கு லைக் அல்லது கமெண்ட் போடுவார். இதனால் இருவரும் நெருங்கி பழகி வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை அவர்கள் இருவருமே மறுத்தது குறிப்பிடத்தக்கது.

