#BREAKING:- மிக பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி..!!
#BREAKING:- மிக பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி..!!;
பிரபல நடிகர் ஜி.எம்.குமார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஜி.எம்.குமார் குமார் சிவாஜி புரொடக்சன்சின் தயாரிப்பில், பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அறுவடை நாள் (1986) படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இது குமார் பல படங்களை உருவாக்க வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. இருப்பினும் இளையராஜாவை இசையமைப்பாளராக நியமிக்க விரும்பாத தயாரிப்பாளர்களின் படங்கள் பலவற்றை நிராகரித்ததாக குறிப்பிட்டார்.
இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன் முதன் முதலில் இயக்கிய ‘கன்னிராசி’படத்தின் திரைக்கதையை ஜி.எம்.குமார் எழுதியுள்ளார். மேலும் பிரபுவின் மை டியர் மார்த்தாண்டன் படத்தின் கதையையும், கமலின் நடிப்பில் வெளியான காக்கி சட்டை படத்தின் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஷங்கரின் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கபட்ட வெயில் படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். மேலும் மாயாண்டி குடும்பத்தார், அவன் இவன், தாரை தப்பட்டை போன்ற படங்களில் இவரது நடிப்பு மிகவும் ரசிக்கப்பட்டது. அவன் இவன் படத்தில் ஹைனெஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிப்பிற்கு இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றுத்தந்தது. விமர்சகர்கள் இவரது நடிப்பை “ரிவெர்டிங்” என்று அழைத்தனர்.
இந்நிலையில், ஜி.எம்.குமார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.