அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. அண்ணாமலை உட்பட 1800 பேர் மீது வழக்கு..!
அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. அண்ணாமலை உட்பட 1800 பேர் மீது வழக்கு..!;
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று கரூர் பேருந்து நிலையம் அருகில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்ட 1800 பேர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக பொது இடத்தில் கூட்டமாக கூடுதல் மற்றும் பொது சாலையை மறித்து இடையூறு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்பு (25-ம் தேதி), அதிமுக சார்பில் கரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 1300 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சி பாரதிய ஜனதா கட்சி தான் என்று பாஜக தலைவர்கள் கூறிவரும் நிலையில், கரூரில் தமிழக அரசைக் கண்டித்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கையை விட, பாஜக நேற்று நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் 1800 பேர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.