நாயை காணோம்.. கதறிய நடிகை.. அப்புறம் நடந்தது என்ன தெரியுமா..?

நாயை காணோம்.. கதறிய நடிகை.. அப்புறம் நடந்தது என்ன தெரியுமா..?;

Update: 2022-07-28 16:29 GMT

கர்நாடக மாநிலம், பெங்களூரு நாகரபாவி டெலிகாம் லே-அவுட்டில் வசித்து வருபவர் நிருஷா. சின்னத்திரை நடிகையான இவர், டிம்பிள் என்ற 8 வயது பெண் நாயை வளர்த்து வந்தார். அந்த நாயை ஒரு இளம் பெண்ணும், இளைஞனும் திருடிச் சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில், திருடிய நாயை திரும்ப தந்து விடும்படி நடிகை நிருஷா கண்ணீர் மல்க சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்து இருந்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் வளர்த்து வந்த நாய்க்கு 8 வயது ஆகிறது. அதற்கு உடல்நல பிரச்சனை உள்ளது. சரியான நேரத்தில் உணவு கொடுக்க வேண்டும். என்னையும், என் அம்மாவையும் பிரிந்து டிம்பிள் ஒரு நிமிடம் கூட இருக்காது.

டிம்பிள் காணாமல் போனதில் இருந்து நானும், எனது அம்மாவும் சாப்பிடாமல் இருக்கிறோம். தயவு செய்து நாயை திருடிச் சென்றவர்கள் திரும்ப தந்து விடுங்கள்” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இதையடுத்து நேற்று, நிருஷாவின் வீட்டின் அருகே உள்ள கோவில் முன்பு திருடப்பட்ட நாயை மர்மநபர் ஒருவர் விட்டார். பின்னர் நிருஷாவின் தாய்க்கு செல்போனில் தொடர்பு கொண்டு, நாயை கோவில் முன்பு விட்டுச் சென்று இருப்பதாக கூறினார்.

இதையடுத்து நிருஷாவும், அவரது தாயும் சென்று நாயை வீட்டிற்கு தூக்கிச் சென்றனர். தனது நாய் திரும்பக் கிடைத்தது குறித்து நிருஷா வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

Similar News