பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி..!

பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி..!;

Update: 2022-07-28 14:36 GMT

பிரபல இயக்குநரும், நடிகருமான ஜி.எம்.குமார் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபு, பல்லவி, ராம்குமார் நடித்த ‘அறுவடை நாள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநர் ஆனவர் ஜி.எம்.குமார். தொடர்ந்து சத்யராஜ், ராதா நடித்த ‘பிக்பாக்கெட்’, கார்த்திக், பல்லவி நடித்த ‘இரும்பு பூக்கள்’, மோகன்-பல்லவி நடித்த  ‘உருவம்’ ஆகிய படங்களை இயக்கினார்.

நடிகை பல்லவியை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜி.எம்.குமார், அதன்பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். ‘கேப்டன் மகள்’, ‘வெயில்’,  ‘மாயாண்டி குடும்பத்தார்’, ‘அவன் இவன்’, ‘தாரை தப்பட்டை’, ‘சரவணன் இருக்க பயமேன்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.


நடிகர் ஜி.எம்.குமாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், சென்னை முகலிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News