ஜனாதிபதி திரௌபதிமுர்மு போட்ட முதல் கையெழுத்து.. எதற்கு தெரியுமா..?

ஜனாதிபதி திரௌபதிமுர்மு போட்ட முதல் கையெழுத்து.. எதற்கு தெரியுமா..?;

Update: 2022-07-28 16:10 GMT

இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக கடந்த 25-ந்தேதி திரௌபதி முர்மு பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் திரௌபதி முர்மு தனது முதல் நீதித்துறை நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தார்.

ஜம்மு - காஷ்மீர் ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக ராஜேஷ் செக்ரியை நியமிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். ஜனாதிபதி முர்மு கையெழுத்திட்ட முதல் நியமன உத்தரவு இது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து நீதித்துறை கூடுதல் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய அரசியலமைப்பின் 224-வது பிரிவு (1) மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக ராஜேஷ் செக்ரியை ஜனாதிபதி நியமித்துள்ளார்’ என்றார்.

சுப்ரீம் கோர்ட் மற்றும் 25 ஐகோர்ட்களின் நீதிபதிகள் நியமனத்திற்கான உத்தரவுகளில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கையெழுத்திட உள்ளார்.

Similar News