நாகை மாவட்டத்தில், வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்ட 60 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் பெண்கள் பள்ளி விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 60 மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விடுதியில் சாப்பிட்ட கோதுமை உப்புமாவில் துண்டுதுண்டாக பல்லி கிடந்ததாக மாணவிகள் புகார் கூறியுள்ளனர்.