லியோனல் மெஸ்ஸி திடீர் விலகல்.. இந்த முடிவுக்கு காரணம் என்ன..?
லியோனல் மெஸ்ஸி திடீர் விலகல்.. இந்த முடிவுக்கு காரணம் என்ன..?
உலக அளவில் தலைசிறந்த கால்பந்து வீரராகத் திகழும் அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த வீரர் லியோனல் மெஸ்சி, ஸ்பெயின் நாட்டின் பிரபல கிளப் அணியான பார்சிலோனா அணியில் தனது 13வது வயது முதல் விளையாடி வருகிறார்.
லியோனல் மெஸ்சி, தனது சொந்த நாடான அர்ஜென்டினாவை விட இந்த பார்சிலோனா அணிக்காக அதிக கோல்களை அடித்துள்ளார். அதோடு, வென்றுகொடுத்த கோப்பைகளும் ஏராளம்.
இந்நிலையில், ‘லியோனல் மெஸ்ஸி இனி எந்த அணிக்கும் சொந்தமானவர் அல்ல; அவருடன் போட்டுக்கொண்ட 21 ஆண்டு கால ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது. இனி அவர் தனி வீரர்’ என பார்சிலோனா அணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்சிலோனாவுடன் மெஸ்ஸி மேற்கொண்ட 21 ஆண்டுகால ஒப்பந்தம் சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து, மேலும் 5 வருடத்திற்கு அவர் பார்சிலோனாவிற்காக ஒப்பந்தம் செய்யப்படுவார். ஆனால் பார்சிலோனா கிளப்பின் நிதி நிலைமை மோசமாக இருப்பதால் அவருக்கு வெறும் 5% மட்டுமே சம்பளம் கொடுக்கப்படும் என்பது போன்ற தகவல்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.
இந்நிலையில் மீண்டும் பார்சிலோனாவிற்காக மெஸ்ஸியை விளையாட வைக்கும் முயற்சி நடைபெற்றது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாக இருந்த நிலையில் அந்த ஒப்பந்தம் ரத்தாகி உள்ளது. இதற்கு நிதி நிலைமை மற்றும் கட்டமைப்புகளே காரணம் என்றும் பார்சிலோனா கிளப் சார்பாக கூறப்படுகிறது.
இதனால், லியோனல் மெஸ்ஸி 21 வருடத்திற்குப் பிறகு அந்த கிளப்பை விட்டு வெளியேறுகிறார். 36 வயதாகும் மெஸ்ஸி இன்றைக்கும் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவரை பல கிளப் அணிகள் இப்போதே மொய்க்கத் துவங்கி இருக்கிறது.
முன்னதாக, கிளப் அணிகளுக்கு மட்டுமே மெஸ்ஸி திறமையாக விளையாடுவார். சொந்த நாட்டைப் பற்றியெல்லாம் அவருக்கு கவலையே இல்லை. அவருடைய தலைமையில் ஒரு கோப்பையைக் கூட அவரால் வாங்கித்தர முடியவில்லை எனப் பல்வேறு விமர்சனங்கள் அவர்மீது வைக்கப்பட்டது. அந்த விமர்சனத்தை சமீபத்தில் நடைபெற்ற கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் மெஸ்ஸி முறியடித்தும் குறிப்பிடத்தக்கது.