மெஸ்ஸி கண்ணீர் துடைத்த டிஷ்யூக்கு 1 மில்லியன் டாலர் ! டிஎன்ஏ.,வுக்கு கடும் போட்டி!

மெஸ்ஸி கண்ணீர் துடைத்த டிஷ்யூக்கு 1 மில்லியன் டாலர் ! டிஎன்ஏ.,வுக்கு கடும் போட்டி!

Update: 2021-08-22 07:47 GMT

மெஸ்ஸி தனது கண்ணீரைத் துடைக்க பயன்படுத்திய டிஷ்யூ பேப்பர், 1 மில்லியன் டாலர் மதிப்பிற்கு ஏலம் விடப்பட்ட நிகழ்வு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அர்ஜெண்டீனா கால்பந்து வீரர் மெஸ்ஸி. இவர் கடந்த 2004 ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார் . பார்சிலோனாவுக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இந்நிலையில், பார்சிலோனா அணியுடனான அவரது ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், அந்த அணியில் இருந்து விடைப்பெற்று பாரீஸ் செயிண்ட் ஜெர்மெயின் அணியில் மெஸ்ஸி ஒப்பந்தம் செய்யப்பட்டார். 

பார்சிலோனா அணியில் இருந்து விடைப்பெறும் முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மிகவும் மன வருத்தத்துடன் மெஸ்ஸி கண் கலங்கினார். மேலும் டிஷ்யூ பேப்பர் பயன்படுத்தி கண்ணீரைத் துடைத்து கொண்டார். இந்த வீடியோ உலகம் முழுவரும் வைரலாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. 

இந்நிலையில், அவர் பயன்படுத்திய டிஷ்யூ பேப்பர் 1 மில்லியன் டாலர் மதிப்பில் ஏலம் விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜெண்டீனாவைச் சேர்ந்த பிரபல இணையதளத்தில், இந்த ஏலத்திற்கான விளம்பரம் வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி, அந்த டிஷ்யூ பேப்பரில் மெஸ்ஸியின் டி.என்.ஏ பதிவாகி உள்ளதால் அதை வைத்து க்ளோனிங் முறைப்படி மெஸ்ஸியின் திறமைகள் கொண்ட இன்னொருவரை உருவாக்க முடியும் எனவும் தகவல் பரவியது.

எனினும், டிஷ்யூ பேப்பர் ஏலம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதுமட்டுமின்றி, அடையாளம் தெரியாத நபர் அந்த டிஷ்யூ பேப்பரை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஒரு வேளை உண்மையாகவே மெஸ்ஸியின் டிஷ்யூ ஏலத்திற்கு விடப்பட்டால், கோடி கணக்கில் காசு கொடுத்து வாங்க ரசிகர்கள் தயாராக உள்ளனர்.
 

newstm.in

Tags:    

Similar News