வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்கள் ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்காக அரசு ஊழியர்கள் பலரும் தேர்தல் பணியல் ஈடுபடுத்தப்பட்டனர்.

முன்னதாக தேர்தல் நடைமுறை குறித்து அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் பணியாற்றும் இடம் இல்லாமல் வேறு இடத்தில் தேர்தல் பணி வழங்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் உட்பட பல்வேறு அரசு துறையை சேர்ந்த வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

வாக்குப்பதிவு நாளன்று அனைவருக்கும் தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. ஆனால் அன்றைய தினம் அரசு ஊழியர்கள் மட்டும் தேர்தல் பணியில் ஈடுபட்டதால் அவர்கள் இந்த மாதத்தில் ஏதாவது ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 விடுமுறை நாளன்று பணியாற்றியதற்கு ஈடு செய்யும் விதமாக ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளாம், அந்த விடுப்பை இந்த மாதத்திற்குள் எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

newstm.in

Tags: