10,+2 பொது தேர்வு தேதிகளில் மாற்றம்! ரம்ஜான் பண்டிகையையொட்டி தேர்வு தள்ளி வைப்பு!
10,+2 பொது தேர்வு தேதிகளில் மாற்றம்! ரம்ஜான் பண்டிகையையொட்டி தேர்வு தள்ளி வைப்பு!
கொரோனா காலத்திற்கு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பியுள்ளனர். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதேபோல் சிபிஎஸ்இ பள்ளிகளும் செயல்பட தொடங்கின. ஆன்லைன் மூலமும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அண்மையில், சிபிஎஸ்இ தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பிற்கு மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரையும், பன்னிரண்டாம் வகுப்பு இருக்கு மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இடையில் ரம்ஜான் பண்டிகை வருவதை அடுத்து அந்த தேதிகளில் நடைபெறும் தேர்வுகளை மட்டும் மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், ரம்ஜான் இஸ்லாமியர்களின் முக்கிய திருநாள். இவ்வாண்டு மத்திய, மாநில அரசுகள் மே 14ஆம் தேதி ரம்ஜான் விடுமுறையை அறிவித்துள்ளன. ஆனால் பிறை தென்படுவதைப் பொறுத்து ரம்ஜான் தேதி ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாற வாய்ப்புள்ளது. இதைக் கணக்கில் கொள்ளாமல் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகளை மே 13, 15 தேதிகளில் அறிவித்துள்ளது.
ரம்ஜான் தேதி மாறும் பட்சத்தில் இஸ்லாமிய மாணவர்கள் சிரமத்துக்குள்ளாவார்கள். எனவே தேர்வு தேதிகளை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தின் அடிப்படையில் தற்போது ரம்ஜான் நாளில் நடைபெற இருக்கும் தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி மே 15ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு மே 21ஆம் தேதிக்கும், மே 13ஆம் தேதி நடைபெற இருந்த பன்னிரண்டாம் வகுப்பு இயற்பியல் தேர்வு ஜூன் 8ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
newstm.in