இந்த மாநிலத்தில் 10, +2 பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு !!
இந்த மாநிலத்தில் 10, +2 பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு !!
இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு சென்ற ஆண்டு மார்ச் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடைபெற்று வந்த நிலையில் 1 முதல் 9-ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
இந்நிலையில் மகாராஷ்டிரா கல்வித்துறை அமைச்சர் இதுகுறித்து வீடியோ ஒன்றைவெளியிட்டார். அதில் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரிப்பு காரணமாக பள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலம், கொரோனா பயம் இதன் காரணமாக மாணவர்களுக்கு தேர்வை எப்படி நடத்துவது என்பது குறித்து முதல்வருடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களின் தேர்வை விட அவர்களின் ஆரோக்கியம் தான் அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன் படி 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வை தள்ளிவைப்பது குறித்து தீவிர கலந்தாலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.