மேற்குவங்கத்தில் 10 மற்றும் +2 பொதுத் தேர்வுகள் ரத்து !!

மேற்குவங்கத்தில் 10 மற்றும் +2 பொதுத் தேர்வுகள் ரத்து !!

Update: 2021-06-07 16:27 GMT

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. வகுப்புகள் ஆன்லைனில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தன. நோய்த்தொற்றின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

அந்த அறிவிப்பை தொடர்ந்து குஜராத், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்கள், மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தும் பிளஸ்2 பொதுத்தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டன.

இந்தநிலையில் மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை அறிவித்தார்.மேலும் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அக்குழு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்று மு.க ஸ்டாலின் அறிவித்தார்.தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் மாணவர்களின் நலன் கருதி +2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். . 

இந்நிலையில், மேற்குவங்கத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,  10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News