10 நிமிட டெலிவரி திட்டம் ரத்து.. கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது சோமோட்டோ !!
10 நிமிட டெலிவரி திட்டம் ரத்து.. கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது சோமோட்டோ !!
சோமோட்டோ நிறுவனத்தின் 10 நிமிட ‘டெலிவரி‘ திட்டம் சென்னையில் அமல்படுத்தப்படவில்லை என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு சாா்பில் உணவு பாா்சல்கள் டெலிவரி நிறுவனங்கள், இ-காமா்ஸ் சேவை வழங்கும் நிறுவனங்களின் நிா்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறை ஆணையா் அலுவலகத்தில் நேற்று நடந்த ஆலோசனையில் காவல்துறை உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியா்கள், இ-காமா்ஸ் நிறுவன ஊழியா்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது தொடா்பான பல்வேறு ஆலோசனைகளும், முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதில் கடந்த காலங்களை விட இப்போது உணவு, பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனங்களின் ஊழியா்கள், போக்குவரத்து விதிமுறை மீறிலில் ஈடுபடுவது குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, சோமோட்டோ நிறுவனத்தின் 10 நிமிட உடனடி ‘டெலிவரி’ திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை எனவும், இந்தியாவில் சில நகரங்களில் மட்டும் அத் திட்டம் தொடங்கப்படுவதாகவும் கூட்டத்தில் பங்கேற்ற அந்த நிறுவனத்தின் நிா்வாகி கூறியுள்ளார். இந்த தகவலை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு நிறுவனத்தின் நிா்வாகிகள், எந்தவொரு திட்டமும் முறையான முன்னறிவிப்பு மற்றும் காவல்துறை ஒருங்கிணைப்புடன் மட்டும் தொடங்கப்படும் என உறுதி அளித்தனா் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சோமோட்டோ நிறுவனத்தின் 10 நிமிட ‘டெலிவரி‘ திட்டம் சென்னையில் தொடங்குவதாக அறிவித்தது. அது எப்படி சாத்தியம் என்றும் இதனால் சாலை விபத்துகள், விதிமீறல்கள் அதிகரிக்கும் என்று புகார் எழுந்தது. இதனையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
newstm.in