பரபரப்பு.. சிரீயல் நடிகை சுட்டுக்கொலை.. 10 வயது சிறுவன் படுகாயம்..!

பரபரப்பு.. சிரீயல் நடிகை சுட்டுக்கொலை.. 10 வயது சிறுவன் படுகாயம்..!

Update: 2022-05-26 12:04 GMT

ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தைச் சேர்ந்த காஜிர் முகமது பட் என்பவரின் மகள் அம்ரீன் பட் (35). பிரபல தொலைக்காட்சி நடிகையான இவர் ஹஷ்ரூ சதூரா பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா இயக்க உறுப்பினர்களான 3 பயங்கரவாதிகள் அம்ரீனின் வீட்டில் வைத்து அவரை துப்பாக்கிகளால் சுட்டனர்.

இந்த தாக்குதலில் அம்ரீனின் மருமகனான 10 வயது சிறுவனையும் சுட்டுள்ளனர். இதில், சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அம்ரீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, “இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க போதிய வார்த்தைகள் இல்லை.

அம்ரீன் பட் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அவரது மருமகன் விரைந்து குணமடைய வேண்டிக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News