100 சதவீத நகைக் கடன் தள்ளுபடி.. அமைச்சர் ஐ.பெரியசாமி சொன்ன தகவல்..!

100 சதவீத நகைக் கடன் தள்ளுபடி.. அமைச்சர் ஐ.பெரியசாமி சொன்ன தகவல்..!

Update: 2022-06-09 15:30 GMT

“கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு 100 சதவீதம் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தகுந்த பயனாளர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டது. பின்னர், ஒவ்வொரு கட்டமாக நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில், “கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு 100 சதவீத நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 14 லட்சத்து 40,000 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Similar News