நாடு முழுவதும் 100சதவீதம் மின்மயமாக்கப்படும்! ரயில்வே அமைச்சர்!
ம் நாட்டில் இயங்கும் கார்கள் அனைத்தும் மின்சாரக் காராகவே இருக்க வேண்டும் என்பது மோடியின் கனவு. இந்தக் கனவை சாத்தியப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மத்திய ரயில்வே மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
8வது உலக எரிசக்தி கொள்கை மாநாடு நேற்று டெல்லியில் நடைபெற்றது. தற்போது இருப்புப் பாதைகளில் 55 சதவீதம் வரை மின்மயமாக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் 5 ஆண்டுகளில் 100 சதவீதமாக்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் மாசு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. 6ஆண்டுகளாக புதிதாக எந்த ஒரு நிலக்கரி ஆலைக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விறகு அடுப்பிலிருந்து காஸ் அடுப்பு, மின்சார அடுப்புகளை நடைமுறைப்படுத்திய பின் சுற்றுச்சூழல் சீர்கேடு அடைவது குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் நம் நாட்டில் இயங்கும் கார்கள் அனைத்தும் மின்சாரக் காராகவே இருக்க வேண்டும் என்பது மோடியின் கனவு. இந்தக் கனவை சாத்தியப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மத்திய ரயில்வே மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
newstm.in