100 கிலோ கேக் – உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற பெண்!!
100 கிலோ கேக் – உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற பெண்!!
புனேவைச் சேர்ந்த கேக் கலைஞர், சிக்கலான வடிவமைப்பு கொண்ட 100 கிலோ கேக் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
புனேவைச் சேர்ந்த பிரபல கேக் கலைஞர் பிராச்சி தபால் டெப், 'வேகன் ராயல் ஐசிங்' (Vegan Royal Icing) என்ற முறையில் மிலான் கதீட்ரலின் சிக்கலான வடிவமைப்பு கொண்ட கேக் ஒன்றை 100 கிலோ எடையில் செய்துள்ளார்.
இதற்காக உலக சாதனை புத்தகம் இவரை முன்மாதிரியான ராயல் ஐசிங் கலைஞர் என்று அங்கீகரித்துள்ளது. பிராச்சி, 'ராயல் ஐசிங்' என்ற சிறப்பு வடிவங்களில் கேக் செய்யும் கடினமான கலையில் நிபுணத்துவம் பெற்றவர்.
பொதுவாக ராயல் ஐசிங் முறையில் முட்டை கலந்தே கேக் செய்யப்படும். ஆனால் பிராச்சி, இந்திய நிறுவனம் ஒன்றுடன் இணைந்து முட்டை கலக்காமல் சைவ முறையில் வேகன் ராயல் ஐசிங் என்ற முறையில் கேக்குகளை வடிவமைக்கிறார்.
இந்த மிலான் கதீட்ரலின் கேக், 6 அடி 4 அங்குல நீளம், 4 அடி 6 அங்குல உயரம் மற்றும் 3 அடி 10 அங்குல அகலம் கொண்டது. இவர் ஐரோப்பிய கட்டிடக்கலை மாதிரியான முட்டை இல்லாத ராயல் ஐசிங் முறை மூலம் கேக்குளை தயார் செய்து பிரபலமானவர்.
இந்நிலையில் கேக் கலைஞர் பிராச்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in