இலங்கைத் தமிழர்களுக்கு 1,000 குடியிருப்புகள்..! - அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி
இலங்கைத் தமிழர்களுக்கு 1,000 குடியிருப்புகள்..! - அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி
திண்டுக்கல் மாவட்ட அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு, 1,000 குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என, அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இலங்கை அதிகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள முகாம்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார்.
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் கே.எஸ். செஞ்சி மஸ்தான், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் இலங்கை அகதிகள் முகாம்களில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், “இலங்கை அகதிகள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை பெற்றுத் தருவதற்கான முயற்சியை தமிழக முதல்வர் மேற்கொண்டுள்ளார். அதற்காக பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்” என்றார்.
வக்பு வாரியத்துக்குச் சொந்தமான 7000 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் கண்டறியப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு நிலங்களை விரைவில் கையகப்படுத்தி வக்பு வாரியத்தில் ஒப்படைக்கப்படும். வக்பு வாரியத்தின் சொத்துகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு உடனுக்குடன் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது” என்றார்.