இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய்.. எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்..!

இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய்.. எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்..!

Update: 2022-03-18 13:57 GMT

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்த அறிவிப்பு நிச்சயம் வெளியாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் மற்றும் பல நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். முதலாம் ஆண்டில் நடைமுறைப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விரிவாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும்” என்று, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

இன்றைய பட்ஜெட்டில் இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த இல்லத்தரசிகளுக்கு, நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News