10,000 போலி கோழிமுட்டை விற்பனை ! பலமணி நேரமாகியும் வேகவில்லை.. வியாபாரி தலைமறைவு !!
10,000 போலி கோழிமுட்டை விற்பனை ! பலமணி நேரமாகியும் வேகவில்லை.. வியாபாரி தலைமறைவு !!
பொதுமக்களிடம் 10,000 போலி கோழி முட்டைகளை விற்பனை வியாபாரி தலைமறைவாக உள்ளார்.
இன்றைய காலக்கட்டத்தில் துரிதமாக செய்யக்கூடியதும், சுவை, ஆரோக்கியம் நிறைந்ததுமாக இருக்கும் உணவு வகைகளில் ஒன்று முட்டை. ஆனால் சில நாட்களாக முட்டை விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் போலி முட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளது மக்களை பெரும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வரிகுண்டப்பாடு மண்டலத்தில் மினி லாரியில் ஒருவர் ஊர் ஊராக சென்று முட்டை விற்பனை செய்யதுள்ளார். குறைந்த விலைக்கு தருவதாக கூறியதால் ஏராளமானோர் முட்டைகளை வாங்கி சென்றிருக்கின்றனர். 30 முட்டைகள் கொண்ட ஒரு பெட்டி 130 ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கின்றனர். இதனால் ஒருமணி நேரத்தில் அனைத்து முட்டைகளும் விற்று தீர்த்திருக்கின்றனர்.
முட்டை விற்று முடிந்ததும் அந்த நபர் வாகனத்தில் இங்கிருந்து பறந்துவிட்டார். வாங்கிய முட்டைகளை பயன்படுத்திய பின்னரே அது போலி முட்டை என்பது பொதுமக்களுக்கு தெரிய வந்துள்ளது. பலமணி நேரம் ஆகியும் முட்டைகள் வேகாமல் இருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ‘
முட்டையை உடைக்க முயன்றும் அது உடையவில்லை. இதனால் மொத்தமாக அனைவரும் ஏமாற்றப்பட்டதை உணர்த்த பொதுமக்கள் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து போலி முட்டையை விற்று தப்பியோடிய வியாபாரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
newstm.in