108 ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிய ஆப்
108 ஆம்புலன்ஸ் சேவைக்காக புதிய ஆஃப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.மேலும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக இரண்டு மாதத்தில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் ஓலா, ஊபர் போன்று ‘மேப்’ வசதியை 108 ஆம்புலன்ஸ் சேவையில் வழங்கப்பட உள்ளது
108 ஆம்புலன்ஸ் சேவைக்காக புதிய ஆஃப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ்களை அழைத்தால் வர தாமதம் ஆகிறது, இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று தி.மு.க. உறுப்பினர் சண்முகையா சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.மேலும், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பகுதிகளில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஒரு மணிநேரம் தாமதமாக வருவதாகவும் கூறினார்.
இதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் "108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு மாநகராட்சிகளில் 8.2 நிமிடங்களிலும், கிராமப்புற பகுதிகளில் 13.5 நிமிடங்களிலும், மலைப் பகுதிகளில் 16 நிமிடங்களிலும் ஆம்புலன்ஸ்கள் சென்றடைகின்றன என கூறினார்.
மேலும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக இரண்டு மாதத்தில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் ஓலா, ஊபர் போன்று ‘மேப்’ வசதியை 108 ஆம்புலன்ஸ் சேவையில் வழங்கப்பட உள்ளது என்றும் அதற்கான ஆஃப்(பிரத்யேக செயலி) விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
newstm.in