10, 11, 12ம் வகுப்புகளுக்கு இந்த பாடவேளை கிடையாது.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு..!
10, 11, 12ம் வகுப்புகளுக்கு இந்த பாடவேளை கிடையாது.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு..!
உடற்கல்வி பாடவேளை நடத்துவது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
முதன்மைக் கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
அதில், நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 9 வரையிலான வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு உடற்கல்வி பாடத்திட்டத்தின்படி விளையாட்டு மைதானத்தில் அந்த வகுப்புகளை நடத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடைபெற இருப்பதால், அவ்வகுப்புகளை தவிர்த்து மற்ற வகுப்புகளுக்கு மட்டும் உடற்கல்வி வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தமிழக அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி உடற்கல்வி இயக்குநர் மற்றும் ஆசிரியர்கள் மூலம் உடற்பயிற்சி வழங்குமாறும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.