வரும் திங்கட்கிழமை முதல் 10ம் வகுப்பு சான்றிதழ்!அரசுத் தேர்வுகள் இயக்ககம்
வரும் திங்கட்கிழமை முதல் 10ம் வகுப்பு சான்றிதழ்!அரசுத் தேர்வுகள் இயக்ககம்
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி திங்கட்கிழமை முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
வரும் திங்கள் முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பள்ளி மாணவர்களுக்குப் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2021 தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை 23.08.2021 தேதி அன்று காலை 11.00 மணி முதல் 31.08.2021 தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தங்களது பள்ளிகளில் சமர்ப்பித்த கைப்பேசி எண்களுக்குக் குறுஞ்செய்தி வழியாக அரசுத் தேர்வுத் துறையின் மூலம் 21.08.2021 தேதி அன்று காலை 11.00 மணிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.. 10ம் வகுப்பு மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்களது பதிவு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து, தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனைத்துப் பள்ளிகளும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.