#BREAKING:- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு..!

#BREAKING:- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு..!

Update: 2022-06-15 14:01 GMT

தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 23-ம் தேதியும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 30-ம் தேதியும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு 31-ம் தேதியும் முடிவடைந்தது.

அதன் பின்னர், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ம் தேதி முதல் தொடங்கும் என்றும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஜூன் 9-ம் தேதியும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 1-ம் தேதி தொடங்கியது.

இதனிடையே, தமிழகத்தில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து, கடந்த 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து உள்ளதாலும், இறுதி முடிவுகளும் தயாராக உள்ளதாலும் திட்டமிட்டபடி நாளை மறுநாள் (17-ம் தேதி) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

விடைத்தாள்களை திருத்தி, மதிப்பெண்கள் பாடவாரியாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் www.deg.tn.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து, வரும் ஜூன் 23-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News