திருமணமான 10வது நாள்.. புதுப்பெண் செய்த காரியம்.. போலீசார் விசாரனை..!
திருமணமான 10வது நாள்.. புதுப்பெண் செய்த காரியம்.. போலீசார் விசாரனை..!
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா சீம்மளம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் மகன் யுவராஜ் (33). இவர், ஒரு தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், சென்னை பூந்தமல்லி தாலுகா அரண்வாயில் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகள் ஜெயஸ்ரீ (24) என்பவருக்கும் கடந்த 6-ம் தேதி மேல்பேட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது.
நேற்று முன்தினம், புதுமாப்பிள்ளை யுவராஜ் வேலைக்குச் சென்று விட்டார். சில மணி நேரத்தில் யுவராஜை செல்போனில் தொடர்பு கொண்ட அவருடைய அண்ணன் லோகநாதன், “உனது மனைவி ஜெயஸ்ரீயை காணவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
யுவராஜ் உடனே வீட்டுக்கு விரைந்து வந்தார். வீட்டில், ஜெயஸ்ரீ கடிதம் ஒன்றை எழுதி வைத்து தாலிைய கழற்றி வைத்துவிட்டு மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயஸ்ரீ எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.