பிரியாணி சாப்பிட்டதால் மரணம்.. 10 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் அறிக்கை தாக்கல்..!

பிரியாணி சாப்பிட்டதால் மரணம்.. 10 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் அறிக்கை தாக்கல்..!

Update: 2022-02-02 18:33 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் மணிக்கூண்டு அருகே இயங்கி வரும் 7 ஸ்டார் ஹோட்டலில், ஆனந்த் என்பவரது குடும்பத்தினர் தந்தூரி பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, ஆனந்தின் 10 வயது மகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். அதே போல், அந்த ஹோட்டலில் சாப்பிட்ட ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த ஜாகிர் பாத்திமா, விஷ்ணு சீனிவாசன், தனியார் பள்ளி ஆசிரியர் பாஸ்கரன் உள்ளிட்ட 19 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஆரணி 7 ஸ்டார் ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டு 10 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், உணவகத்தில் சாப்பிட்ட கெட்டுப்போன சில்லி சிக்கன், தரமற்ற தண்ணீரே 30 பேரின் உடல்நல பாதிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News