செல்பி எடுத்தபோது விபரீதம் - 11 பேர் பலி!
செல்பி எடுத்தபோது விபரீதம் - 11 பேர் பலி!
ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த அமர் அரண்மனை உள்ளது. இங்கு வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். நேற்று (ஜூலை 11) மாலையில் மாநிலம் முழுவதும் அதீத மழை பெய்தது. இந்நேரத்தில் பலர் கண்காணிப்பு கோபுரம் மீது ஏறி அரண்மனை சுற்றுப்பகுதிகளை பைனாகுலர் மூலம் பார்த்து கொண்டிருந்தனர். இந்நேரத்தில் மின்னல் தாக்கியது. இதில் 11 பேர் பலியாகினர். இதில் 7 பேர் சிறுவர்கள். இதேபோல், கோடா, ஜலாபர், தோல்பூர் ஆகிய மாவட்டங்களிலும் மின்னல் பாய்ந்து 7 பேர் பலியாகினர்.
பல்வேறு இடங்களில் படுகாயமடைந்த 21 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். மழைக் காலத்தில் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோல் உத்தரப் பிரதேசத்தில் 2 சிறுவா்கள் உள்பட 10 போ் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.மின்னல் தாக்கி உ.பி.,யில் 41, மத்திய பிரசேத்தில் 9 என மொத்தம் பலி எண்ணிக்கை 70 ஆக உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர, உத்தரகாண்டில் 8 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலியாகினர். இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், டில்லி, அரியானா, மேற்கு உத்தரப்பிரதேசம், மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் மட்டும் பருவமழை தொடங்குவதை தாமதமாவதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.