இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 11 பேர் அடுத்தடுத்து மரணமடைந்தனர்; மேலும், 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்போடியா நாட்டின் கிராமப்புறங்களில் நடைபெறும் திருமண விருந்துகள், கிராம விழாக்கள் மற்றும் இறுதிச் சடங்கு போன்ற நிகழ்ச்சிகளில் வீட்டில் தயாரிக்கப்படும் அரிசி ஒயின் பரிமாறப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கடலோர கம்போட் மாகாணத்தில் நடைபெற்ற ஒரு இறுதிச் சடங்கு நிகழ்வின்போது, அங்கு வந்திருந்தவர்களுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட அரிசி ஒயின் பரிமாறப்பட்டது. அதைக் குடித்த 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “அந்த மது, நச்சுத் தன்மையுடைய மெத்தனால் கொண்டு காய்ச்சப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில், கம்போடியா முழுவதும் மூன்று தனித்தனி சம்பவங்களில் மெத்தனால் கொண்டு காய்ச்சப்பட்ட மது குடித்து 30க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்” என்றனர்.

Tags: