வரும் ஜூலை 11ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!

வரும் ஜூலை 11ம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!

Update: 2022-07-09 05:25 GMT

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காந்தி அம்மன் கோவில் தேரோட்ட விழா நடைபெற உள்ளது. இந்த நெல்லையப்பர் கோயில், புகழ் பெற்ற தலங்களில் ஒன்றாகும். மேலும் காந்திமதி அம்மை வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டம் உடைய நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார். இந்த திருத்தலத்தில் காந்திமதி அம்மனுக்கு வெள்ளிக்கிழமைகளில் தங்கப் பாவாடை அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அத்துடன் இத்திருத்தலம் அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் இது காந்தி பீடமாகத் திகழ்கிறது.

மேலும் ஆண்டுதோறும் புரட்டாசி மாத இறுதியில், ஐப்பசி மாதத் தொடக்கத்தில், காந்திமதி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. இத்தலத்தின் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது. அத்தகைய தேர் திருவிழா வரும் ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Similar News