இந்த மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..ஆனால் தமிழகத்திற்கு இல்லை..!!
இந்த மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..ஆனால் தமிழகத்திற்கு இல்லை..!!
செப்டம்பர் மாதத்தில் பல பண்டிகைகள் வருகின்றன. அனைத்து பண்டிகைகளும் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தாது. எனவே, விடுமுறை என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும்.
அந்த வகையில், செப்டம்பர் மாதம் வங்கிகள் மொத்தம் 12 நாட்களுக்கு இயங்காது. அதில் மொத்தம் 6 நாட்கள் வார இறுதி நாட்கள் ஆகும். அதாவது, செப்டம்பர் 5, 11, 12, 19, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வார விடுமுறை என்பதால் அந்த 6 நாட்கள் வங்கிகள் செயல்படாது. மீதமுள்ள விடுமுறை நாட்கள் எப்போது? அது எந்தெந்த மாநிலங்களுக்கு பொருத்தும் என்பதை பார்க்கலாம்.
மாநில வாரியாக விடுமுறை பட்டியல் விவரம்:
செப்டம்பர் 8: ஸ்ரீமந்த் சங்கர்தேவ் பண்டிகை காரணமாக கவுகாத்தியில் வங்கிகள் செயல்படாது
செப்டம்பர் 9: ஹரித்தலிகா தீஜ் பண்டிகை. இது கேங்டாக்கில் கொண்டாடப்படுகிறது. எனவே அன்றைய தினம் அப்பகுதியில் வங்கிகள் மூடப்படும்
செப்டம்பர் 10: இன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுவதால், அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
செப்டம்பர் 11: விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் இரண்டாம் நாள் என்பதால் பல இடங்களில் விடுமுறை
செப்டம்பர் 17: ராஞ்சி மாநிலத்தில் அன்று கர்மால் பூஜை கொண்டாடப்படுவதால் அங்கு செயல்படும் வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 20: கேங்டாக் பகுதியில் 'இந்திர யாத்திரை' பண்டிகை வருவதால் அப்பகுதியில் உள்ள வங்கிகள் மற்றொரு விடுமுறை
செப்டம்பர் 21: ஸ்ரீ நாராயண குரு சமாதி தினத்தையொட்டி, கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகளுக்கு விடுமுறை.
இதில் தமிழகத்துக்கு நாட்கள் வார விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தி தவிர மற்ற நாட்கள் வங்கிக்கு விடுமுறை கிடையாது என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.