மீண்டும் 12 மணி நேர ஊரடங்கு! மீறுவோருக்கு 1 லட்சம் அபராதம்!
மீண்டும் 12 மணி நேர ஊரடங்கு! மீறுவோருக்கு 1 லட்சம் அபராதம்!
உலகம் முழுவதுமே கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தி வருகின்றது. பல நாடுகள் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்திய நிலையில், மஹாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று சமீப நாட்களில் அதிகரிக்க துவங்கியுள்ளது.
இதையடுத்து மஹாராஷ்டிரா மாநிலம் முழுவதும் மாலை 5 மணி முதல் அடுத்த நாள் காலை 5 மணி வரையில் 12 மணி நேர ஊரடங்கு உத்தரவி பிறப்பிப்பது குறித்து அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
மஹாராஷ்டிராவில், நேற்று ஒரே நாளில் 6,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதையடுத்து, அம்மாநில அரசு ஊரடங்கு உத்தரவு குறித்து ஆலோசித்து வருகிறது. இது குறித்து, அம்மாநில அமைச்சர் விஜய் வாடேடிவார் கூறும் போது, அமராவதி, வர்தா மற்றும் யவத்மால் மாவட்டங்களில், ஏற்கனவே பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தொற்று பரவலின் தீவிரத்தை பொறுத்து, ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் குறித்து சுயமாக முடிவெடுத்துக் கொள்ள, மாவட்ட நிர்வாகங்கள், கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மஹாராஷ்டிராவில் பெரும்பாலானவர்கள் முக கவசம் அணியாமல், சமூக இடைவெளியையும் பின்பற்றாமல் இருப்பது கவலைத் தருவதாக அமைச்சர் தெரிவித்தார். விதிமுறைகளை மீறுவோர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் ஆலோசித்து வருவதாக தெரித்த அமைச்சர், இது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி, ஒரு வாரத்தில் முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.