டேராடூனில் விபத்து : 12 பேர் உயிரிழப்பு..!!

டேராடூனில் விபத்து : 12 பேர் உயிரிழப்பு..!!

Update: 2021-10-31 14:50 GMT

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக பல பகுதிகள் பாதிப்பை சந்தித்துள்ளது.  கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கனமழையால் நிலச்சரிவில்  சிக்கி இதுவரை 79க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் சக்ரதா தாலுகாவில் புல்ஹாத்-பைலா சாலையில் பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்த விபத்துக்குள்ளாகியுள்ளது.  இதில்  12 பேர் உயிரிழந்துள்ளனர்.  3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் , மீட்பு படையினருடன் இணைந்து சக்ரதா மாஜிஸ்திரேட்டும் உடன் சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.  
 

Tags:    

Similar News