புத்தாண்டில் சோகம்- கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி !
புத்தாண்டில் சோகம்- கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி !
காஷ்மீரில் மாதா வைஷ்ணவ தேவி பவன் பகுதியருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கத்ரா நகரில் பிரசித்தி பெற்ற மாதா வைஷ்ணவ தேவி கோயில் அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் ஒரே நேரத்தில் கோயிலில் கூடினர். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதிக அளவில் கூடியதால் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரும் திணறினர்.
இதனால் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்களில் பலர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோ காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது என ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்தார். 12 பேர் உயிரிழப்புக்கு காரணமான இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஷ்மீரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா 2 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளார். மேலும், மாநில அரசு சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
newstm.in