12-ம் வகுப்பு வணிகவியல் வினாத்தாள் லீக்.. நாளை முதல் பள்ளிகளுக்கு செக்..!
12-ம் வகுப்பு வணிகவியல் வினாத்தாள் லீக்.. நாளை முதல் பள்ளிகளுக்கு செக்..!
12-ம் வகுப்பு வணிகவியல் திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் சென்னையில் இருந்து கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இன்று பிற்பகலில் நடக்க வேண்டிய தேர்வுக்குரிய வினாத்தாள்கள் சென்னையில் உள்ள 8 பள்ளிகளுக்கு காலையிலேயே வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், எந்த பள்ளியில் இருந்து வினாத்தாள்கள் கசிந்தன என்பது தெரியவரவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திருப்புதல் தேர்வுகள் தொடங்குவதற்கு சற்று முன்னரே கேள்வித்தாள்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அப்படி அனுப்பி வைக்கப்பட்ட கேள்வித்தாள்கள், தேர்வுக்கு முன்கூட்டியே பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (13ம் தேதி), கணித தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த நிலையில், இன்று (14ம் தேதி) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய 12-ம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்கான வினாத்தாள், தேர்வுக்கு முன்கூட்டியே கசிந்ததாக புகார் எழுந்துள்ளது.
இதனால், நாளை முதல் வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு முன்கூட்டியே வழங்கப்பட மாட்டாது என்று தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.