12ம் வகுப்பு பாடங்களை நடத்தக் கூடாது.. அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை..!

12ம் வகுப்பு பாடங்களை நடத்தக் கூடாது.. அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை..!

Update: 2022-03-18 12:17 GMT

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளின் நிலை குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்தது.

இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது; “பள்ளிகளை மேம்படுத்துவது, தரமான கல்வி, அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டங்கள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.  இதில் தெரிவிக்கும் கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

எமிஸ் பதிவை பொறுத்தவரை, இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்து அரசுத்துறையினருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதற்கு முன்பு மாணவர்கள் குறித்த தகவல்களை 98 வகையான ஆவணங்களில் ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டி இருந்தது. ஆனால் எமிஸ் செயலியில் ஒரே பக்கத்தில் பதிவு செய்திட முடியும்.

தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு பாடங்களை நடத்தக் கூடாது. இதற்காகவே 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. விதிகளை மீறும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Similar News