12-ம் வகுப்பு மாணவர்களே.. துணைத்தேர்வு எழுத நாளை முதல் ஹால் டிக்கெட்..!

12-ம் வகுப்பு மாணவர்களே.. துணைத்தேர்வு எழுத நாளை முதல் ஹால் டிக்கெட்..!

Update: 2022-07-19 15:16 GMT

தமிழகத்தில், கடந்த மே மாதம் 12-ம் வகுப்பு  பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு, ஜூன் 20-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், பொதுத் தேர்வு எழுதாதவர்கள், தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத்தேர்வுகள் வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.

12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் அதற்கான ஹால் டிக்கெட்டுகளை http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை (20-ம் தேதி) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, தமிழகம், புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News