அங்கன்வாடி மையத்தில் சத்துமாவு கஞ்சி சாப்பிட்ட 13 குழந்தைகள் மயக்கம்...!!
அங்கன்வாடி மையத்தில் சத்துமாவு கஞ்சி சாப்பிட்ட 13 குழந்தைகள் மயக்கம்...!!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நெய்குப்பி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 33 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இக்குழந்தைகளுக்கு நாள்தோறும் சத்துமாவு கஞ்சி மற்றும் மதிய உணவு வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி, அங்கன்வாடி மையத்திற்கு இன்று வந்திருந்த குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துமாவு கஞ்சி வழங்கப்பட்டது. இந்த நிலையில், அதனை உட்கொண்ட 13 குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி உட்பட 29 பேர் திடீரென்று மயக்கம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு வாகனங்கள் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திண்டிவனம் சார் ஆட்சியர் அமீத் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
பல்லி விழுந்த சத்துமாவு கஞ்சியை உட்கொண்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி உட்பட 29 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.