லிஃப்ட்-ல் 2 மணி நேரம் சிக்கி தவித்த குழந்தை உள்பட 13 பேர்.. சென்னையில் பரபரப்பு!!
லிஃப்ட்-ல் 2 மணி நேரம் சிக்கி தவித்த குழந்தை உள்பட 13 பேர்.. சென்னையில் பரபரப்பு!!
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும்.
இந்த நிலையில், நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் நேற்று இரவு 7:45 மணி அளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இருந்து வந்த பயணிகள் மின் தூக்கியை பயன்படுத்தினர். 5 பெண்கள், ஒரு ஒன்றரை வயது கை குழந்தை உட்பட 13 பேர் பயணித்த அந்த மின் தூக்கி தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நின்றது. மின்தூக்கியில் சிக்கி இருந்தவர்கள் அதில் ஒட்டப்பட்ட அவசர எண்ணிற்கு தொடர்பு கொண்டு, உள்ளே சிக்கியிருக்கும் விபரத்தை ரயில்வே காவலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக விரைந்து வந்த ரயில்வே காவல் துறையினர் லிப்ட் இரண்டு தளங்களுக்கு இடையில் பாதியிலேயே சிக்கி இருப்பதை கண்டனர். அரை மணி நேரத்தில் மின்தூக்கி பொறியாளர் வரவழைக்கப்பட்டு லிப்டை இயக்கும் பணிகள் நடைபெற்றன.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் நிலையில் அங்கு மின்தூக்கி பராமரிப்பதற்கு ஊழியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என பயணிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
நுங்கம்பாக்கத்தில் மின்தூக்கி செயல்படாமல் இரண்டு மணி நேரமாக பயணிகள் சிக்கிக்கொண்டதால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Newstm.in