இதுவரை 13.32 கோடி பேர் பாதிப்பு! கொரோனா குறித்து விஞ்ஞானிகள் கவலை!

இதுவரை 13.32 கோடி பேர் பாதிப்பு! கொரோனா குறித்து விஞ்ஞானிகள் கவலை!

Update: 2021-04-09 18:01 GMT

2019 இறுதியில் சீனாவின் வூகாண் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா இன்றளவும் உலகுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு நடத்தியிருந்த போதிலும் றி புதிய விசாரணை நடத்த வேண்டும் என விஞ்ஞானிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் சீனாவின் வூகாண் நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் இந்த வைரஸ் கசியவிடப்பட்டதாகவும் கூறப்பட்டு வந்தது.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்கள்படி,  கொரோனா இதுவரை உலகம் முழுவதும் 200 நாடுகளில் 13.32 கோடி பேரை ஏப்ரல் 9 வரை தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  28.88 லட்சம் பேர்.

இந்த வைரசின் தோற்றம் குறித்து உலக சுகாதார நிபுணர்கள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின்ப்படி சீனாவின் ஆய்வுக்கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது.மேலும்  வன விலங்குகளிடம் இருந்து வந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் 24 பேர் ஒன்றாக இணைந்து, கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து  விரிவான புதிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை  விடுத்துள்ளனர்.

அதன்படி கிடைக்கக்கூடிய சிறந்த வழிமுறைகளைக் கொண்டு கொரோனா தொற்றுநோயின் தோற்றம் குறித்து முழு விசாரணைக்கு அழைப்பு விடுக்கிறோம்.இந்த பேரழிவு எவ்வாறு தொடங்கியது என்பதை புரிந்து கொள்வதில் எந்தவிதமான முயற்சியையும் விட்டுவிடக் கூடாது உலகில் உள்ள அனைத்து மக்கள் மற்றும் அனைத்து நாடுகளின் நலனுக்காக இதைச்செய்ய முன்வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது சீனாவுக்கு எதிரானது அல்ல.“எதிர்காலத்தில் இதுபோன்ற மதிப்பாய்வுகளில் அமெரிக்க ஆய்வுக்கூடங்களும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் விரிவான விசாரணையை உடனே தொடங்க வேண்டும்” என  வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News