சென்னை விமான நிலையத்துக்கு வந்த 1,364 நட்சத்திர ஆமைகள்.. அதிகாரிகள் அதிர்ச்சி !

சென்னை விமான நிலையத்துக்கு வந்த 1,364 நட்சத்திர ஆமைகள்.. அதிகாரிகள் அதிர்ச்சி !

Update: 2022-01-06 07:45 GMT

சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு சரக்கு விமானம் ஒன்று செல்ல இருந்தது. அந்த சரக்கு விமானம் மூலம் மலேசியாவுக்கு அரிய வகை, வன விலங்குகள் கடத்தப்பட இருப்பதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சரக்கு விமானத்துக்கு வந்த பார்சல்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர்.
 
அந்த வகையில் பெட்டி ஒன்றில் அரிய வகை நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரியவந்தது. அதனுடன் சேர்ந்த ஏற்றுமதி செய்வதற்காக இருந்த 13 பெட்டிகளில் சோதனை நடத்தியப்போது 230 கிலோ உயிருள்ள நண்டு பார்சல், வந்திருந்தது. அந்த பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அதனுடன் இந்தியவகை நட்சத்திர ஆமைகள் உயிருடன் இருப்பது  கண்டு அறியப்பட்டது. இதனையடுத்து அனைத்துப் பார்சல்களும் திறந்து பார்க்கப்பட்டதில் அதில் இருந்த மொத்தம் 1,364 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அழிந்து வரும் ஆபூர்வ இனங்கள் பட்டியலில்  இந்த ஆமைகள்,  இருப்பதால், அவற்றை ஏற்றுமதி வர்த்தகம் செய்ய தடைவிதிக்கப் பட்டுள்ளது. அதன் மதிப்பு சுமார்ரூ.7 லட்சம். விசாரணையில், போலி முகவரியை பயன்படுத்தி நட்சத்திர ஆமைகளை மலேசியாவிற்கு கடத்த முயன்றதும் நட்சத்திர ஆமைகளை கடத்தல் கும்பல் ஆந்திரா சதுப்பு நிலப்பகுதியிலிருந்து பிடித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கைப்பற்றப்பட்ட நட்சத்திர ஆமைகளை சென்னை கிண்டியில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

newstm.in

Similar News