மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 14 பேர் உயிரிழப்பு!!
மினி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து 14 பேர் உயிரிழப்பு!!
உத்தராகண்டில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய போது மினிவேன் பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.
சம்பாவத் மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்டோர் மினி வாகனத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்றனர். பின்னர் நிகழ்ச்சி முடிந்து இரவு 10 மணியளவில் திரும்பியுள்ளனர்.
அப்போது தண்டா கக்னாய் என்ற இடத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மினிவேன் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இரவு நேரம் என்பதால் விபத்து நடந்தது யாருக்கும் தெரியவில்லை. அதிகாலை 3 மணியளவில் விபத்து குறித்த தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது. இதனையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், பள்ளத்தாக்கில் கிடந்தவர்களை மீட்டனர்.
அவர்களில் 11 பேரது உடல்களை மட்டுமே மீட்க முடிந்தது. மீதமுள்ள 4 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். வாகனத்தை ஓட்டி வந்த பிரகாஷ் ராம் மற்றும் அவரது உதவியாளர் திரிலோக் ராம் ஆகியோர் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர்.
அவர்கள் இருவரும் பள்ளத்தாக்கில் இருந்து மெலே ஏறிவந்து கிராம மக்களிடம் விபத்து குறித்து தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்தே கிராம மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
newstm.in