அதிமுக தலைமை அலுவலகத்திற்கு 144 தடை உத்தரவு?

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு 144 தடை உத்தரவு?

Update: 2022-07-11 10:13 GMT

மோதல் போக்கு தொடர்வதால் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலக பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஓபிஎஸ் கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கதவை உடைத்தனர்.

இதனையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர் மீது ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஈபிஎஸ் ஆதரவாளர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

அதிமுக அலுவலகம் அருகே தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இருதரப்பினரும் எதிர் எதிரே நின்றுக்கொண்டு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது ஹெல்மெட் அணிந்திருந்தனர்.

கல்வீச்சு, மோதலுக்கு பின் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் அதிமுக தலைமை அலுவலகம் வந்துள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் ஆதரவாளர்களை விரட்டியடித்துள்ளனர். அந்த பகுதி போர்க்களம் போல காட்சியளிக்கிறது.

வன்முறையில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் படங்கள் கிழித்து, தீவைத்து எரிக்கப்பட்டது.

அதிமுக அலுவலக மோதலில் வாகனங்கள் உடைப்பு தொடர்பாக 15 அதிமுக தொண்டர்களை காவல்துறை  கைது செய்தது. அவர்கள் அருகில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்த அதிமுகவினர் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

Similar News