வரும் 18ம் தேதி 144 தடை உத்தரவு.. போலீஸ் கமிஷனர் உத்தரவு..!
வரும் 18ம் தேதி 144 தடை உத்தரவு.. போலீஸ் கமிஷனர் உத்தரவு..!
கர்நாடகாவில், பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, வரும் 18-ம் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற உள்ளது.
அதன்படி, பெங்களூரு தெற்கு மண்டலத்தில் 8 மையங்களிலும், வடக்கு மண்டலத்தில் 8 மையங்களிலும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற இருக்கிறது.
விடைத்தாள் திருத்தும் பணியின் போது முறைகேடுகள் நடப்பதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பெங்களூருவில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும் கல்வி மையங்களை சுற்றி 200 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார்.
வருகிற 18-ம் தேதியில் இருந்து விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெறும் வரை இந்த 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.