14 வயது சிறுமி மீது ஒருதலைக்காதல்.. தூங்கிக்கொண்டிருந்த போது குடும்பத்தோடு கடத்திச் சென்ற இளைஞர்..!
14 வயது சிறுமி மீது ஒருதலைக்காதல்.. தூங்கிக்கொண்டிருந்த போது குடும்பத்தோடு கடத்திச் சென்ற இளைஞர்..!
சேலம் மாவட்டம் ஆருர்பட்டியில் 14 வயது சிறுமியை, குடும்பத்தோடு வந்து கடத்திச் சென்ற வாலிபரை ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓமலூர் அருகே உள்ள தாரமங்கலம் ஒன்றியம் சேடப்பட்டி ஊராட்சி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (40). இவர் அதே பகுதியில் தையல் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மேகலா 36 இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகனும் 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சௌந்தரராஜன் 24 என்ற வாலிபர், ஜெய்கணேஷின் மகளான பள்ளி சிறுமியை அவ்வப்போது கேலி கிண்டல் செய்து வந்துள்ளார். மேலும் சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பள்ளி மாணவியை கடத்தி சென்ற இளைஞரை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஓமலூர் அருகே 14 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்ய கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
newstm.in