மேக வெடிப்பு ஏற்பட்டு 15 பேர் உயிரிழப்பு!!

மேக வெடிப்பு ஏற்பட்டு 15 பேர் உயிரிழப்பு!!

Update: 2022-07-09 09:00 GMT

ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில்  அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அமர்நாத் புனித யாத்திரை நடைபெறாத நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த 30ஆம் தேதி தொடங்கியது. 

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு அருகே மேக வெடிப்பு ஏற்பட்டது. மேகம் வெடித்ததால் புனித குகைக்கு அருகில் உள்ள முகாம்கள் பாதிக்கப்பட்டன.

இந்த சம்பவத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து இயற்கை பாதிப்புகளை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

40 பேர் காணாமல் போனதாக அஞ்சப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், தொடர்ந்து மழை பெய்து வருவதாகவும் இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படையின் போலீசார் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் வான்வழியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்கா  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

Similar News