16 வயது சிறுவனுக்கும் 19 வயது பெண்ணுக்கும் டும் டும் டும்.. போலீஸ் டிக் டிக் டிக்..
16 வயது சிறுவனுக்கும் 19 வயது பெண்ணுக்கும் டும் டும் டும்.. போலீஸ் டிக் டிக் டிக்..
பெங்களூரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் அப்பகுதியில் சிலிண்டர் வெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். அதேபகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 19 வயது பெண் ஒருவர் வீட்டில் பணி செய்து வந்தார். அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சிலிண்டர் கேஸ் டெலிவரி செய்யும்போது அந்த பெண்ணுக்கும், சிறுவனுக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் அந்த பெண் வீட்டை விட்டு சிறுவனின் வீட்டிற்கு வந்துவிட்டார். இதனையறிந்த இரு வீட்டாரும் பேசி முடிவெடுத்து காதலர்களுக்கு திருமணம் செய்துவைத்தனர்.
திருமணம் முடிந்து ஒருவாரம் கழிந்த நிலையில் திருமணமான சிறுவனுக்கு வயது 16 என்பது குறித்து போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் சிறுவனின் பிறப்பு சான்றிதழை கைப்பற்றி ஆய்வு செய்தப்போது சிறுவனுக்கு 16 ஆவதை உறுதி செய்தனர். பின்னர் குழந்தைத் திருமணம் என முடிவு செய்த போலீசார் பெண் மற்றும் சிறுவனின் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in