தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி.. கோவையில் வாகனச் சோதனையில் சிக்கிய ரூ.17.5 லட்சம் !!
தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி.. கோவையில் வாகனச் சோதனையில் சிக்கிய ரூ.17.5 லட்சம் !!
கோவையில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.17.5 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச்சென்றால் அதனை பறிமுதல் செய்து வருகின்றனர். அதேநேரத்தில் பணத்திற்கான ஆவணங்களை ஒப்படைத்தால் பணத்தி திரும்ப வழங்குவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில், இன்று காலையிலேயே கோவை 82ஆவது வார்டுக்கு உட்பட்ட சுங்கம் பைபாஸ் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அப்போது காரில் 3 பேர் இருந்த நிலையில், அவர்களிடம் 17.5 லட்சம் ரூபாய் இருந்ததை கண்டுபிடித்தனர். அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.17.5 லட்சத்தைத அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் காரில் இருந்த மூவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், திண்டுக்கல் மாவட்டம் கோசுகுறிச்சி பகுதியை சேர்ந்த சதக்கத்துல்லா ஹமீது (42) என்ற தனியார் நிறுவன ஊழியர், கோவையில் நிலம் வாங்க கிரையம் செய்வதற்காக பணத்துடன் உறவினர்கள் 2 பேருடன் வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த பின்னர் பணம் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
newstm.in